மோகன்லாலின் ‘ஜிமிக்கி, கம்மல்’ சேலஞ்சால் இணையத்தில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கும் பாடல்!

அந்த வீடியோக்களில் மிக அதிகமுறை பலராலும் பார்க்கப்பட்டு இணைய வைரலாகி இருப்பது கேரளாவின் ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் நடனம் ஆடிப் பதிவு செய்து வெளியிட்ட
மோகன்லாலின் ‘ஜிமிக்கி, கம்மல்’ சேலஞ்சால் இணையத்தில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கும் பாடல்!

ஆகஸ்டு 31 ஆம் தேதி ஓணம் திருவிழாவை ஒட்டி மோகன்லாலின் ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ திரைப்படம் வெளியானது. 

இப்படத்தில் இடம்பெற்ற பாடலொன்று கல்லூரி மாணவ, மாணவிகளால் அதிகம் கொண்டாடப்பட்டு தற்போது இணைய வைரல்களில் ஒன்றாகியிருக்கிறது. ‘திறந்த புத்தகம்’ எனும் பொருள் கொள்ளக்கூடிய அந்தத் திரைப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று. லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால், அன்னா ரேஷ்மா ராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவர்கள் பாடி ஆடும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ள பாடல் ஒன்றை வினீத் நாராயணனும், ரஞ்சித் உன்னியும் பாடியிருந்தனர். அந்தப் பாடல் தான் தற்போது ‘என்டம்மேடே ஜிமிக்கி கம்மல்’ என்ற பெயரில் இணைய வைரலாகியிருக்கிறது.  

இந்தப் பட வெளியீட்டின் போது படக்குழு சார்பாக ‘ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்’ என்ற பெயரில் ஒரு சவால் முன் வைக்கப்பட்டது. அதன்படி இந்தப் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோ எடுத்து படக்குழுவினருக்கு அனுப்ப வேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு தற்போது கேரளாவிலிருக்கும் பல கல்லுரி மாணவ, மாணவர்களும் மற்றும் கேரள ரசிகர்களும் கூட இந்தப் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோ எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோக்களில் மிக அதிகமுறை பலராலும் பார்க்கப்பட்டு இணைய வைரலாகி இருப்பது கேரளாவின் ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் நடனம் ஆடிப் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ தான். இந்தப் பாடலை தற்போது கேரள ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பலர் அதிகமும் ரசித்துப் பார்ப்பதோடல்லாமல் தங்களது நட்பு வட்டத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தப் பாடல் இது தான்...

படக்குழுவினர் திரைப்பட புரமோஷனுக்காகச் செய்த வேலை தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி இந்தப் பாடல் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும்கூட பட்டிதொட்டியெங்கும் களை கட்டி வருகிறது. இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பால் தற்போது ஜிமிக்கி, கம்மல் என்ற பெயரில் முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் குறுகிய காலத்தில் 11,000 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com