இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: அமீர் கான் பதில்

News image
Updated On :24 மே 2018, 7:02 am

எழில்

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்து உதவி புரிந்ததாக சஞ்சய் தத்துக்கு எதிராக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், நன்னடத்தையைக் காரணம் காட்டி, தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே அவரை மகாராஷ்டிர அரசு விடுவிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகியுள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள். ஜூன் 29 அன்று வெளியாகவுள்ள

இந்தப் படத்தில் நடிக்கத் தனக்கு வாய்ப்பு வந்ததாக அமீர் கான் கூறியுள்ளார். எனினும் நடிக்க மறுத்தது ஏன் என்பதற்கு அவர் அளித்துள்ள விளக்கம்: 

ராஜ்குமார் ஹிரானி, திரைக்கதையுடன் வந்து என்னைச் சந்தித்தார். எனக்கு மிகவும் பிடித்துப்போனது. சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத் வேடத்தில் என்னை நடிக்க வேண்டினார். அதுவும் அருமையான கதாபாத்திரம். படமே அப்பா - மகனின் உறவைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் அட்டகாசமாக இருந்தது. 

ஒரு நடிகராக, சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் அருமையாக உள்ளது. என் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. எனவே இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தைத் தவிர என்னால் வேறு கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று ஹிரானியிடம் கூறினேன். சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதால் என்னால் அதிலும் நடிக்கமுடியாது. எனவே இந்தப் படத்தில் என்னை நடிக்க அழைக்க வேண்டாம் என்று கூறினேன். சஞ்சு படத்தைக் காண ஆவலாக உள்ளேன் என்று அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார்.

YouTube video thumbnail
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.