நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்': அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள் - உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இருந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இருந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனம் ஆடும் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் - அனிருத் இணைவதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார்.
இதையும் படிக்க | மெகா ஸ்டார் - 50 ஆண்டுக்களை நிறைவு செய்த மம்மூட்டி
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியட்டுள்ளது. அதில் இந்தப் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகியோர் காமெடி வேடங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றன. பீஸ்ட் படத்தில் மூன்று காமெடியன்கள் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக அன்குர் அஜித் விகல், மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ, நடிகை அபர்னா தாஸ் போன்றவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...