இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ.1.5 கோடி வருமானம் பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின் பாதுகாவலர் இடமாற்றம்

அமிதாப் பச்சனின் காவலராக 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஜிதேந்திர ஷிண்டே, அதிக வருமானப் புகார் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 11:00 am

DIN

அமிதாப் பச்சனின் காவலராக 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஜிதேந்திர ஷிண்டே, அதிக வருமானப் புகார் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாவலராக இருந்தவர் ஜிதேந்திர ஷிண்டே.  காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் இவர், அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்து வந்துள்ளார். மேலும், அமிதாப் பச்சனின்  நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக ஜிதேந்திர ஷிண்டேவுக்கு அமிதாப் பச்சன் அவ்வப்போது பணம் கொடுத்துவந்துள்ளாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜிதேந்திர ஷிண்டேவின் வருமானம் 5 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து பல்வேறு இணையதளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்துள்ளன. இதனையடுத்து ஜிதேந்திர ஷிண்டே வேறு காவல்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

மேலும் ஜிதேந்திர ஷிண்டேவின்  மனைவியின் பெயரில் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அமைப்பு ஒன்று செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஜிதேந்திர ஷிண்டேவின்  வருமானம் சொத்து விபரம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகே அவருக்கு சம்பளம் தவிர்த்து வேறு எந்தெந்த வழிகளில் வருமானம் வருகிறது என்பது தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.