'96' பட இயக்குநருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி
'96' பட இயக்குநர் பிரேம் குமாருடன் விஜய் சேதுபதி இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


'96' பட இயக்குநர் பிரேம் குமாருடன் விஜய் சேதுபதி இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்த '96' படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படம் தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
அந்த படம் வெளியாகி 2 வருடங்கள் ஆன பிறகும் பிரேம் குமாரின் தனது அடுத்தப் படத்தை அறிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பிரேம் குமாரின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியுடன் மீண்டும் பிரேம் குமார் இணையவுள்ளார்.
அடிப்படையில் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் கதை, உண்மையில் பிரேம் குமாரின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...