சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

''அஜித் பிரபல நடிகர் என்று தெரிந்துகொண்டேன். ஆனால்...'' - நடிகர் அஜித்துடனான சந்திப்புக்கு பிறகு பிரபலம் கருத்து

நடிகர் அஜித்துடனான சந்திப்பு குறித்து மாரல் யாஜர்லு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:13 am

DIN


நடிகர் அஜித்துடனான சந்திப்பு குறித்து மாரல் யாஜர்லு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பைக்கில் உலகம் சுற்றும் பெண் மாரல் யாஜர்லு என்பவர் சில நாட்களுக்கு முன் தில்லி வந்தார். அவரை நடிகர் அஜித் சந்தித்து, உலகப் பயணம் குறித்து ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

Story image

இந்த நிலையில் மாரல் யாஜர்லுவை மீண்டும் நடிகர் சந்தித்துள்ளார். அப்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள் மாரல், நான் அஜித் குமாரிடம் உலகப் பயணம் குறித்து எனது அனுபவங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டேன்.

Story image

அவர் தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் எங்களது புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்புக்கு பிறகே அவர் ரசிகர்களால் மிகவும் நேசிக்கக் கூடிய மனதர் என்று தெரிந்துகொண்டேன். 

Story image

நான் ஒருவரை தொழில் சார்ந்து பணி சார்ந்து மதிப்பிடுவதில்லை. நாம் மனிதர்களாக எப்படி வித்தியாசப்படுகிறோம் என்பதே முக்கியம். அஜித் மிக தன்னடக்கமாக பேசுகிறார். மரியாதைக்குரிய மனிதராக நடந்துகொண்டார். மிகவும் சிறந்த மனிதர். அவர் சமூக வலைதளங்களில் இல்லை. இதனால் அவரது சுதந்திரத்தில் நாம் தலையிடக் கூடாது. அவரது அனுமதியுடனேயே புகைப்படங்களை பகிர்ந்தேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.