
இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 18 முதல் தேனியில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் கதாநாயகியாகும் அதிதி, சமூகவலைத்தளங்களில் இணைந்துள்ளார். ட்விட்டரில் அவருடைய ஐடி - https://twitter.com/AditiShankarofl, இன்ஸ்டகிராம் ஐடி - https://www.instagram.com/aditishankarofficial/. விருமன் படத்தில் அதிதி அறிமுகமான தகவலையடுத்து அதிதியை ட்விட்டரிலும் இன்ஸ்டகிராமிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பேர் பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள்.
விருமன் பட பூஜை இன்று அருமையாக நடைபெற்றது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார் அதிதி. சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் நன்றி தெரிவித்துள்ள அதிதி, 100 சதவீத உழைப்பைச் செலுத்தி உங்களைப் பெருமைப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.