நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘குலு குலு’ திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
‘மேயாத மான்’, ’ஆடை’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம்தான் ‘குலு குலு’. இப்படத்தில் ஜியார்ஜ் மரியான், தீனா, நமீதா கிருஷ்ண மூர்த்தி, அதுல்யா சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
சர்கள் பாக்ஸ் நிருவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள ‘ஏஜண்ட் கண்ணாயிரம்’ மற்றும் பெயரிடப்படாத கன்னட படமொன்றும் ரிலீஸ்க்கு காத்திருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, கமல் நடித்த ‘விக்ரம்’ படங்களுக்கு துணை திரைக்கதை ஆசிரியராக ரத்ன குமார் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் இணையும் படத்திலும் ரத்ன குமார் இணைவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சந்தானம் இப்படத்தினைப் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
குலு குலு ஜூலை 29 முதல் திரையரங்கில் வெளியாகும். கலகலப்பான மகிழ்சியான திரைப்படத்திற்கு காத்திருங்கள். என்னுடைய படத்தில் இது ஒரு புதுமையான முயற்சி. அனைவரையும் திரையரங்கில் சந்திப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



