கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெற்றிமாறனின் உதவி இயக்குநராகும் பிரபல நடிகர்

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இணைய உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ்  தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:01 am

DIN

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இணைய உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ்  தெரிவித்துள்ளார்.

‘ஆடுகளம்’ ‘விசாரணை’ ‘அசுரன்’ ‘வடசென்னை’ என வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் வெற்றிமாறன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், விடுதலை படத்திற்குப் பின் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக இணைய இருப்பதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  ‘கிராமிய கானா பாடகராக என் கலைவாழ்வைத் தொடங்கி இருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய் மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு என் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.