மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வியப்பில் பாலிவுட்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு வார நாள்களில் நம்பமுடியாத வசூல்!

மிகச்சிறிய படமாக வெளியான தி காஷ்மீா் ஃபைல்ஸ், விரைவில் ரூ. 100 கோடியைக் கடந்து...

News image

அனுபம் கொ், பல்லவி ஜோஷி, விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி

Updated On :17 மார்ச் 2022, 6:47 am

DIN

இந்தியாவில் 6-ம் நாளன்று ரூ. 19.05 கோடி வசூலை எட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளது தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்.

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். பண்டிட் சமூகத்தினா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்த திரைப்படம், மாா்ச் 11-ம் தேதி வெளியானது. இயக்கம் - விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. 

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பலரும் தி காஷ்மீா் ஃபைல்ஸ் படத்தைப் பாராட்டி எழுதியதால் நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. முதல் நாளன்று இந்தியா முழுக்க 600 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 3.55 கோடி மட்டும் வசூலித்த இந்தப் படம் 6-ம் நாளான நேற்று ரூ. 19.05 கோடியை இந்தியா முழுக்க வசூலித்துள்ளது. ஞாயிறன்று பெற்ற வசூலான ரூ. 15.10 கோடியை விடவும் வேலை நாள்களான கடந்த மூன்று நாள்களிலும் இதன் வசூல் அதிகமாக இருப்பது திரையுலகினரை மிகவும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் புதிய சூழலை உருவாக்கியுள்ளன. இதுவரை இந்தியாவில் இந்தப் படம் ரூ. 79.25 கோடியை வசூலித்து சாதனை படைத்து வருகிறது. மேலும் உலகளவில் முதல் 6 நாள்களில் ரூ. 87.40 கோடி வசூலித்ததாகப் படத்தை வெளியிட்ட ஜீ ஸ்டூடியோஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா காலத்துக்குப் பிறகு வெளியான படங்களில் 6-ம் நாளன்று அதிக வசூலைப் பெற்ற படமாக உள்ளது, தி காஷ்மீர் ஃபைல்ஸ். இதற்கு முன்பு சூர்யவன்ஷி படம் 6-ம் நாளன்று ரூ. 9.55 கோடியை அள்ளியதே சாதனையாக இருந்தது. 

ஆனால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் அதே நாளில் இரு மடங்கு வசூலை எட்டி நம்பமுடியாத சாதனையைப் படைத்துள்ளது. நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகரிக்கிறதே தவிர குறையும் நிலையில் இல்லை. இதனால் மிகச்சிறிய படமாக வெளியான தி காஷ்மீா் ஃபைல்ஸ், விரைவில் ரூ. 100 கோடியைக் கடந்து இதே வேகத்தில் ரூ. 200 கோடி வசூலையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.