மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 'டான்': எஸ்.ஜே. சூர்யா

டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 மே 2022, 6:00 am

DIN


டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள டான் திரைப்படம் நேற்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனும் அதிகாலை காட்சியில் ரசிகர்களின் வரவேற்பைக் காண சென்னையில் நிறைய திரையரங்குகளுக்கு விசிட் அடித்தார்.

முதல் நாளில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களே வந்தன.

இந்த நிலையில், டான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இன்று (சனிக்கிழமை) காலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா, டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்திலும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு வழக்கம்போல் பாராட்டுகள் குவிகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.