நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓடிடியில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 மே 2022, 9:44 am

DIN

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம், ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். பண்டிட் சமூகத்தினா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் - தி காஷ்மீா் ஃபைல்ஸ். அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்தப் படம், மாா்ச் 11-ம் தேதி வெளியானது. இயக்கம் - விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. 

சமூகவலைத்தளங்களில் பலரும் தி காஷ்மீா் ஃபைல்ஸ் படத்தைப் பாராட்டி எழுதியதால் நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமானது. முதல் நாளன்று இந்தியா முழுக்க 600 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பிறகு 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 

இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 3.55 கோடி மட்டும் வசூலித்த இந்தப் படம் அதற்குப் பிறகு நம்பமுடியாத வசூலை அள்ளியது. படம் வெளியான முதல் வாரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையை விடவும் திங்கள் அன்று அதிக வசூலை அடைந்தது. 8-வது நாளன்று ரூ. 100 கோடி வசூல் என்கிற இலக்கை அடைந்தது. 5-வது வாரத்தில் அதன் வசூல் ரூ. 250 கோடியை எட்டியது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது. 13-ம் நாளன்று ரூ. 200 கோடி வசூலை எட்டிய இந்தப் படம் ரூ. 250 கோடி வசூலை 31-வது நாளன்று அடைந்தது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.