கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதில் பெரிய அரசியல்: நடிகர் விஷ்ணு விஷால்

தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 நவம்பர் 2022, 4:59 pm

DIN

தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஷ்தி திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக அப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால் கணவன் மனைவிக்கு இடையே எழும் கருத்துவேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் எனவும்,தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகின்றன எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மையில்லை எனவும் தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுவதாகவும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.