விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் ‘சண்ட வீராச்சி’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை ரவி தேஜா, விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெளியான சல் சக்கா பாடல் 10 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில் தற்போது ‘சண்ட வீராச்சி’ பாடல் வெளியாகியுள்ளது. விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ளார். கர்ணன் படத்தின் மூலம் பிரபலமான பாடகி கிடாக்குழி மாரியம்மாள் இந்தப் பாடலை பாடியுள்ளார். ஜஸ்டின் பிராபகர் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



