சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

'இந்த ரஜினி படத்துக்கு இசையமைக்கும்போதுதான் யுவன் பிறந்தார்' - இளையராஜா சுவாரசியத் தகவல்

யுவன் ஷங்கர் ராஜா குறித்த நெகிழ்ச்சியான சம்பவத்தை இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:12 am

DIN

யுவன் ஷங்கர் ராஜா நேற்று (ஆகஸ்ட் 31) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துதெரிவித்தனர். 

அதன் ஒரு பகுதியாக இளையராஜா தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்த வாழ்த்துசெய்தியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ''ஒரு காலகட்டத்தில் ஆழியாறு அணைப் பகுதியில் ஒருசில நாட்கள் தங்கியிருந்து 4, 5 படங்களுக்கு இசையமைப்பது வழக்கம். அப்படியொருமுறை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜியும் இயக்குநர் மகேந்திரனும் என்னை ஆழியாறுக்கு அழைத்துசென்றார்கள். அப்பொழுது என் குழுவினரோடு அங்கு சென்றேன். 

தயாரிப்பாளர் கேஆர்ஜி கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவருவார். ஒருமுறை அவர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது உனக்கு பையன் பிறந்திருக்கிறான் என்றார். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் மனைவி பிரசவிக்கும் தருணத்தில்கூட இசையமைத்துக்கொண்டிருந்திருக்கிறேனே தவிர அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவில்லை. என் மனைவியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

குழந்தை பிறந்துவிட்டதாக கேஆர்ஜி சொன்னபோது மகிழ்ச்சியில் இசையமைத்த பாடல் தான் செனோரீட்டா என்ற பாடல். படத்தின் பெயர் ஜானி. நடிகர் ரஜினிகாந்த் படம். இயக்குநர் மகேந்திரன். அப்போது பிறந்தவர் யுவன். யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.