டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் புதிய படத்தில் ஒப்பந்தமானார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்தியேன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் பாடல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
#Maaveeran audio rights bagged by @saregamasouth
â Shanthi Talkies (@ShanthiTalkies) December 6, 2022
Music by @bharathsankar12@Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @Mee_Sunil @DirectorMysskin @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @LokeshJey @DoneChannel1 #MaaveeranWithSaregama pic.twitter.com/qcmSPtseAG
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆக. 22-ல் திமுக செயற்குழுக் கூட்டம்!

தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!
சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!

திமுகவை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது! சாபம் விடுகிறாரா ஆர்.எஸ். பாரதி?
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமி Press Meet! | ADMK | Edappadi Palaniswami | EPS |



