இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டான் இயக்குநருடன் இணைகிறாரா விஜய் ?

நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் அந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜூலை 2022, 11:52 am

DIN

நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் அந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய்யின் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

இதனையடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது. 

இந்த நிலையில் பீஸ்ட் பட தோல்வியால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தை டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.