
நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான்சி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகை அஞ்சலி தமிழில் 2007ஆம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமானார். ஆனால் 2006ஆம் ஆண்டிலே அவர் தெலுங்கில் முதல் படம் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் பாவக் கதைகள் தொடரில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இயக்குநர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடிக்கும் இணையத்தொடர் ‘ஜான்சி’. இயக்குநரின் திருவின் இரண்டாவது படைப்பு இது. அவர் முதன்முதலாக இயக்கும் இணையத்தொடரும் இதுவே. இதில் காவல்துறை அதிகாரியாக அஞ்சலி நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசரண் பாகலா இசையமைக்க ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த தொடர் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது. இந்த இணையத் தொடர் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்.27 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...