
தொலைக்காட்சி தொடர்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரியோ ராஜ். இவர் பிக்பாஸிலும் கலந்துக் கொண்டுள்ளார்.
2019இல் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் 2021இல் ‘பிளான் பண்ணிப் பண்ணனும்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் ரம்யா நம்பீசன் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ‘ஜோ’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை டாக்டர் டி. அருள்நந்து தயாரிக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். பவ்யா டிரிகா
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் ரியோ ராஜ். சிவகார்த்திகேயன் மாதிரி தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் ஜெயிக்க போராடும் ரியோ ராஜ்க்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கிறது.
17 வயதிலிருந்து 27 வயது வரை உள்ள இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு- கேரள எல்லையில் உள்ள கல்லூரியில் நடக்கும் கதையாக இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக தாடியை வளர்த்தாக ரியோ ராஜ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தளபதி 67’ எல்சியூ உறுதி: விக்ரம் பட நடிகர் சுவாரசிய தகவல்!
கவுண்டமணியின் நகைச்சுவை பாணியில் சந்தானத்தின் அடுத்த படத்தலைப்பு!
மோகன்லால் படத்தில் கமலுடன் மற்றுமொரு தமிழ் நடிகர்!
‘தம்பி இது தமிழ்நாடு’- கவனம் ஈர்க்கும் மாஸ்டர் மகேந்திரனின் புதிய பாடல்!
மாஸ்டர் மகேந்திரனின் பான் இந்தியப் படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.