ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் டிரெண்டான விஜய்! 

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்த பேச்சுகள் அதிகமாக இருந்ததாக இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் டிரெண்டான விஜய்! 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக கிண்டல்களுக்குள்ளானது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் வசூலில் பாதிப்பில்லை என தெரிவித்தது. 

இந்நிலையில் நேற்று நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்த பேச்சுகள் அதிகமாக இருப்பதாக இணையத்தில் டிரெண்டாகியுள்ளன. அப்படி யார் யார் என்னென்ன பேசினார்கள்? 

  • நடிகர் ரஜினிகாந்த பீஸ்ட் திரைப்படம் குறித்து பேசினார். பீஸ்ட் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. நான் கலாநிதி மாறன் அவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது படம் ‘நெகட்டிவ் ரிவிவ் வந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு லாபம்தான்’ எனக் கூறியதாக கூறினார்.  
  • தயாரிப்பாளர் கலாநிதிமாறன் பேசும்போதும் நடிகர் விஜய் கூறியது போல ரஜினி சாருக்கு அவரேதான் போட்டி எனப் பேசியதும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. 
  • நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷ், “விஜய்யை போல ரஜினி சாரும் காலம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவார். பின்பு கேரவனுக்கு செல்லாமல் எங்களுடனேயே இருப்பார்’ எனக் கூறினார்.  
  • இயக்குநர் நெல்சன், “எனக்கு முதலில் ரஜினி சாரிடம் கதை சொல்ல தன்னம்பிக்கையே இல்லை. பின்னர் விஜய் சார்தான் போய் செல்லுயா நல்லா இருக்கும்” என தன்னம்பிக்கை ஊட்டினார். 
  • அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ந்ததாக விடியோக்கள் இணையத்தில் உலவி வருகின்றன.  
  • கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தளபதி என பேசியதும் ரசிகர்கள் சப்தமிட்டதாக ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தக் காரணங்களால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ட்ரெண்டாகியுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com