எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

'குக் வித் கோமாளியிலிருந்து...': குரேஷி நெகிழ்ச்சிப் பதிவு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருப்பது தொடர்பாக குரேஷி தனது இன்ஸ்டாரகிராமில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :16 மார்ச் 2023, 1:24 pm IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருப்பது தொடர்பாக குரேஷி தனது இன்ஸ்டாரகிராமில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஜன.28 முதல் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக உள்ளனர். ரக்‌ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா பங்கேற்றுள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா போன்றவர்கள் வெள்ளித் திரையில் படங்களில் நடித்து வருகின்றனர்.

அதேபோல், குக்குகளாக சிருஷ்டி டாங்கே,  ஷெரின், விசித்ரா,  ராஜா ஐயப்பா, விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர் ராஜ்குமார், ஆண்ட்ரியா, சிவாங்கி உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், இலிமினினேஷன் சுற்றில்  கிஷோர் ராஜ்குமார், காளையன் வெளியேறினர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

Story image

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷியும் வெளியேறினார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “காமெடி பண்ணாம சாக மாட்டேன், குக் வித் கோமாளியை விட்டு போக மாட்டேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.