/

நடிகர் பிருத்விராஜ்ஜின் ஆடு ஜீவிதம்: ரிலீஸ் தேதி எப்போது? 

பிரபல மலையால நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பினை படக்குழு அறிவித்துள்ளது. 

News image
Updated On :28 நவம்பர் 2023, 3:15 pm

DIN

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் அமலா பால் ப்ரித்விராஜுடன் நடித்துள்ளார். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். 

Story image

மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Story image

நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர்  பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு எப்படியெல்லாம் தள்ளிப்போனது குறித்து நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். 

Story image

கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். 

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நவ.30ஆம் தேதி மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுமென ப்ரித்விராஜ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.