/

குட் நைட் மணிகண்டனின் புதிய படம்: வைரல் புகைப்படங்கள்!

குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 11:02 am

DIN

குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

தற்போது, மணிகண்டன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

மேலும், இப்படத்தில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மணிகண்டன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகர்ணாவில் நடைபெற்றது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களை மணிகண்டன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.