
படம்: இன்ஸ்டாகிராம் | அனுமோல்
மலையாள நடிகை அனுமோல் தமிழில் ஒருநாள் இரவில், ஃபர்ஹானா ஆகிய படங்களின் மூலமும் அயலி எனும் இணையதொடர் மூலமாகவும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

யோகா செய்வதில் ஆர்வம் உடையவர் அனுமோல். பரதநாட்டியம் ஆடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் அடிக்கடி நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவார்.
இதையும் படிக்க: ஜப்பான் படத்தின் ரகசியம் பகிர்ந்த அனு இமானுவேல்!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அனுமோலுக்கு இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதையும் படிக்க: விஜய் 68: தயாரிப்பாளரின் புதிய அப்டேட்!

2012இல் பி.பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான ‘இவன் மேகரூபன்’ எனும் படத்தில் தங்கமணி கதாபாத்திரத்தில் அனுமோல் நடித்திருந்தார். இந்தப்படம் மலையாள கவிஞர் பி. குஞ்ஞிராமன் நாயர் வாழ்க்கை வரலற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இதையும் படிக்க: தொழில்நுட்பத்தை இப்படியா பயன்படுத்துவது?: ராஷ்மிகா உருக்கமான பதிவு!

இந்தப் படத்தில் அனுமோல் கிராமத்து பாடகியாக நடித்திருந்தார். இதுகுறித்து அனுமோல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:

என்னுடைய முதல் படமாகவும் பி.பாலசந்திரன் இயக்கத்திலும் வெளியான ‘இவன் மேகரூபன்’ படத்தில் தங்கமணி என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் ஆகும். தங்கமணி நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட கிராமத்து பாடகி கதாபாத்திரம் ஆகும். இந்தப் படத்தின் மூலம் பல அற்புதமான கலைஞர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இது முற்றிலும் ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.
தற்போது அனுமோல் தமிழின் மூத்த நடிகர் மோகனின் ஹரா படத்தில் நடித்து முடித்துள்ளார். முதலில் குஷ்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அனுமோல் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...