கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தமிழ்நாட்டில் முதல் 5 இடங்களைப் பிடித்தத் தொடர்கள்!

டிஆர்பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) என்பது, மக்கள் எந்த தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கிறார்கள், அதில் எந்த நிகழ்ச்சி / தொடரை அதிக நேரம் பார்க்கிறார்கள் என்பதைத் தரவுகள் அடிப்படையில் கணக்கிடுவது

News image
Updated On :14 அக்டோபர் 2023, 5:19 pm IST


தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தொலைக்காட்சிகள் வாரியாகவும், நிகழ்ச்சிகள் அல்லது தொடர்கள் வாரியாகவும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டிஆர்பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) என்பது, மக்கள் எந்த தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கிறார்கள், அதில் எந்த நிகழ்ச்சி / தொடரை அதிக நேரம் பார்க்கிறார்கள் என்பதைத் தரவுகள் அடிப்படையில் கணக்கிடுவதாகும். மாதமொருமுறை இவை கணக்கிடப்படுகின்றன. தொடர்களுக்கு வாரமொருமுறை கணக்கிடப்படுகின்றன.

இனியா

அந்தவகையில் இந்த வாரத்தில் வெளியான டிஆர்பி பட்டியலில் 5வது இடத்தில் இனியா தொடர் உள்ளது. இனியா தொடர் டிஆர்பி பட்டியலில் 9.12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆல்யா மானசா இந்தத் தொடரில் முதன்மை பாத்திரததில் நடிக்கிறார். 

வானத்தைப்போல

4வது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல தொடர் உள்ளது. இந்தத் தொடர் 10.07 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இந்தத் தொடரில் தற்போது  விஜய்யின் நண்பர் சஞ்சீவ் காவலர் வேடத்தில் நடிப்பது மேலும் பலத்தைக் கூட்டியுள்ளது. 

சுந்தரி 

சன் தொலைக்காட்சியின் சுந்தரி தொடர் 3வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடர் 800 எபிஸோட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. எனினும் இன்னும் சலிப்படையாத வகையில் கதையம்சம் அமைந்துள்ளது. முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் கேப்ரியல்லா, கிராமத்துப் பெண்ணின் நடிப்பையும், தற்போது ஆட்சியரான பிறகு கொடுக்கும் நடிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர். இந்தத் தொடர் 10.12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

கயல் 

சைத்ரா ரெட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் கயல் தொடர் 2வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 10.72 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குடும்பத்தை ஒற்றை ஆளாக நின்று தாங்கும் பெண் கயல். தற்போது தம்பி தங்கை இருவரும் பிரச்னையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விதத்தில் கயல் அவர்களுக்கு ஆதரவாக இருந்து எப்படி எல்லாத்தையும் சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பாக நகர்கிறது.

எதிர்நீச்சல் 

முதல் இடத்தில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. டிஆர்பியில் அதிக புள்ளிகளைப் (11.54) பெற்று முதலிடத்தில் நீடித்து வருகிறது. மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்குப் பிறகு ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்து வருவதால், இந்தத் தொடரின் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் பார்வையாளர்களும் அதிகரித்துள்ளனர். முன்பு பெற்ற டிஆர்பி விட இந்தமுறை எதிர்நீச்சல் அதிக டிஆர்பி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.