12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

'லவ்வர்' பட நடிகைக்கு ஆபாச வார்த்தைகளால் கிண்டல்! அப்படி என்ன செய்தார்?

சமூக வலைதளங்களில் லவ்வர் படத்தில் நடித்த நாயகிக்கு மோசமான விமர்சனங்கள் வருகின்றன.

Published On :

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், இளைய தலைமுறையிடம் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்தது.

Story image

தற்போது, இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றன.

நாயகி ஸ்ரீ கௌரி ப்ரியா மட்டுமல்ல துணைக் கதாபாத்திரமாக நடித்த ஹரிணி சுந்தராஜன் நடிப்பும் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்று வருகினறன.

ஹரிணி சுந்தராஜன்

ஹரிணி சுந்தராஜன்

இந்நிலையில் இவரை இணையத்தில் பலரும் மோசமாக பேசி வருகிறார்கள். காதலை பிரிப்பதே இந்த மாதிரியான பெண்கள்தான் என இணையத்தில் ஆண்கள் பலரும் மோசமான வார்த்தைகளால் இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

இவர் நடித்த கதாபாத்திரம் பிடிக்கவில்லை எனில் அவரை ஏன் அவமரியாதை செய்ய வேண்டுமென சிலரும் இவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஹரிணி சுந்தராஜன்

ஹரிணி சுந்தராஜன்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை ஹரிணி சுந்தராஜன், “லவ்வர் படத்தில் எனது (ஐஸ்வர்யா) கதாபாத்திரம் பிடிக்காததால் ஒரு முட்டாள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதை பார்த்து நடுக்கத்துடன் இன்று விழித்தேன்.

முதலில், படத்தில் அவர்களுக்கு ஒரு கதாபாத்திரத்தை பிடிக்கவில்லை எனில் ஒரு நடிகையை அவமரியாதை செய்வதை சரி என நினைக்கிறார்கள். இரண்டாவது, இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை, இவர்களது நடத்தைகளால்தான் பல ஐஸ்வர்யாக்கள் தேவைப்படுகிறார்கள் இல்லையா?

பிடிக்கவில்லை என்பதை அவமரியாதையுடன் செய்ய வேண்டியதில்லை” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.