
நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் தன் 69-வது படத்துடன் சினிமாவிலிருந்து விலகி முழுநேர அரசியலுக்கு வருவதையும் அறிவித்துள்ளார்.
சினிமாவில் தனக்கென பெரிய புகழும் வணிகமும் இருக்கும்போதே இம்முடிவை அவர் எடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியமளித்துள்ளது. அரசியலுக்கு வந்தபின் அவர் குறித்த செய்திகளும் தகவல்களும் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு 132 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் இந்த வரியைச் செலுத்தாமல் வாகனத்தைப் பயன்படுத்தி வந்தார். இதனை அறிந்த நீதிமன்றம் வரியை அளிக்க உத்தரவிட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
தொடர்ந்து, பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் தன் காரைக் கொண்டு வந்து படக்குழுவினரை வைத்து ஓட்டினார். அந்த விடியோ வெளியாகி வைரலானது.
தற்போது, எம்பயர் ஆட்டோ என்கிற கார்களை விற்கும் நிறுவனம் மூலம் இந்தக் கார் ரூ. 2.5 கோடி ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.