நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் இவர் நடிப்பில் 2022இல் ஹே சினாமிகா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியன் 2, பகவந்த் கேசரி ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. தற்போது காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு சத்யபாமா என்ற படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தப் படத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.
ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா படத்தில் காஜல் அகர்வால், காவலதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 7ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி - விஜய்க்கு காஜல் அகர்வால் வாழ்த்து!
காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி





