லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ டீசர் அப்டேட்!

நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கும் ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.
லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ டீசர் அப்டேட்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ டீசர் அப்டேட்!
யாகந்தி கோயிலில் புஷ்பா 2 படப்பிடிப்பு: ராஷ்மிகா பகிர்ந்த அப்டேட்!

இது என்னவென்று புரியாமல் இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதன்படி, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைப்பதாகவும் அறிமுகம் லோகேஷ் கனகராஜ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ டீசர் அப்டேட்!
ராம் சரண் 16: படப்பிடிப்பு தொடங்கியது!

இந்நிலையில் இதன் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com