சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த்.வி என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமரன் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.60 கோடி கொடுத்துப் பெற்றதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், புதுச்சேரியில் 30 நாள்களாக தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இதற்கடுத்து வெளியீட்டுக்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்லாம் இனிதே... சேயோன் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
சேயோன் படப்பிடிப்பு போஸ்டர்!
சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK





