ரஜினி - 171 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி - 171 படத்தின் பெயர் இதுவா?

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.  ஏப்.22ஆம் தேதி பெயர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி - 171 படத்தின் பெயர் இதுவா?
தக் லைஃப் படத்தில் அருண் விஜய்?

இந்த நிலையில், ரஜினி - 171 படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், பான் இந்திய திரைப்படமாக இது உருவாகும் என்பதால், படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்.

1981-ல் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த கழுகு திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com