மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

10 படங்களுக்குமேல் நடிப்பேன் என நினைக்கவில்லை: 100-ஆவது பட விழாவில் மனோஜ் பாஜ்பாயி!

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயி தனது 100-ஆவது பட விழாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Published On :

1994இல் ஷேகர் கபூர் இயக்கிய பண்டிட் குயின் படத்தில் அறிமுகமானவர் நடிகர் மனோஜ் பாஜ்பாயி. பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா படத்தின் மூலம் சினிமாவில் நடித்து மனோஜ் பாஜ்பாயி பிரபலமானார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தமிழில் அஞ்சான், சமர் ஆகிய  படங்களிலும் நடித்துள்ளார். 

55 வயதான இவர் கமர்ஷியல் படங்களைவிட நல்ல சினிமாக்களில் நடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இவரது தி ஃபேமலி மேன், ஜோரம், குல்மோஹர் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன. இதுவரை தனது நடிப்பிற்காக மனோஜ் பாஜ்பாயி  3 தேசிய விருதுகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

Story image

மும்பை அந்தேரியில் நடைபெற்ற தனது 100வது படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் நடிகர் மனோஜ் பாஜ்பாய். இந்தப் படத்தின் பெயர் ‘பய்யா ஜி’.

பன்சாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்தினை அபூர்வ் சிங் கார்கி இயக்கியுள்ளார். விபின் சர்மா, ஜோயா ஹுசைன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி படம் வெளியாகிறது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் மனோஜ் பாஜ்பாயி பேசியதாவது:

நான் 10 படங்களுக்கு மேல் நடிப்பேன் என நினைத்ததில்லை. ஆனால், வாழ்க்கை என்னை 100 படங்களில் நடிக்க அனுமதித்துள்ளது. இதனால் நான் மட்டுமே கடின உழைப்பை செய்கிறேன் என்று அர்த்தமில்லை, அனைத்து கலைஞர்களுமே தினமும் போராடுகிறார்கள். கடவுள், ரசிகர்களின் ஆதரவினால் மட்டுமே நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.