

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. தொடர்ந்து, ஊட்டி, கேரளத்தில் நடைபெற்று முழுமையாக முடிவடைந்தது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் - 2!
இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகை ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.
நீண்ட நாள்களாவே படத்தின் பெயரை அறிவிக்காமல் சூர்யா - 44 என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இப்படத்திற்கு, ‘கல்ட்’ எனப் பெயரிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கல்ட் என்கிற பெயரை நடிகர் அதர்வா தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் பின் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தலைப்பைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சூர்யா - 46 பெயர் அறிவிப்பு!
சூர்யா - 46 புதிய அறிவிப்பு!
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

சூர்யா - 46 வெளியீடு எப்போது?
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

