மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிக் பாஸ் 8: சக போட்டியாளர்களால் மனமுடைந்த நடிகர் அர்ணவ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் நடிகர் அர்ணவ் மனமுடைந்து நிற்கும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

News image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ணவ்

யூடியூப்

Updated On :20 அக்டோபர் 2024, 1:58 pm

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் நடிகர் அர்ணவ் மனமுடைந்து நிற்கும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அனைத்து மட்டமான விருதுகளும் அர்ணவுக்கே பொருந்தும் என ஆண்கள் அணியிலுள்ள அனைத்து போட்டியாளர்களும் விமர்சித்துள்ளனர்.

இதனைப் பெருமையாக கருதுவதாகக் கூறிய அர்ணவையும், தொகுப்பாளர் விஜய் சேதுபதி இதில் என்ன பெருமையாக நினைக்க இருக்கிறது என சாடியுள்ளார்.

2வது வாரத்தில் பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இருவாரங்களைக் கடந்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் விளையாட்டைத் தக்கவைத்துக்கொள்வதில் மிகவும் கவனத்துடன் உள்ளனர்.

இந்த வாரம் மக்களால் வெளியேற்றப்படும் நபர்களின் பட்டியலில் (நாமினேஷன்) 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

விஜே விஷால், தர்ஷா குப்தா, செளந்தர்யா, ரஞ்சித், கானா ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்ணவ், சாச்சனா ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

இதில் மக்கள் குறைவாக வாக்களிக்கும் நபர், பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருக்கத் தகுதியற்றவர் என்று வெளியேற்றப்படுவார். கடந்த வாரம் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் இடம்பெற்றுள்ள 10 பேரில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகளின்படி, தர்ஷா குப்தா அல்லது அர்ணவ் வெளியேறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முன்னோட்ட விடியோவின்படி அர்ணவ் வெளியேறுவார் எனத் தெரிகிறது.

அர்ணவிடம் பேசும் விஜய் சேதுபதி

அர்ணவிடம் பேசும் விஜய் சேதுபதி

சுமைதாங்கி அர்ணவ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரப் போட்டியில், சொம்பு தூக்கி, குரூப்புல டூப்பு, டம்மி பாவா, டிராமா கிங், பார்வையாளர்களைப் பார்க்கும் பார்வையாளர் ஆகிய விருதுகளை பிக் பாஸ் அறிவித்திருந்தது.

இந்த விருது யாருக்கு பொருந்துமோ அந்த நபருக்கு பெண்கள் அணியினர் அளிக்கலாம். இதேபோன்று பெண்கள் அணியிலும் இந்த விருதுக்கு தகுதியுடையவருக்கு ஆண்கள் அணியினர் விருது வழங்கலாம்.

இந்தப் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் 5 பேருக்கு மேற்கண்ட விருதுகளை பெண்கள் தேர்வு செய்து வழங்கினர். ஆனால், இன்று விஜய் சேதுபதி ஆண் போட்டியாளர்களிடையே ஒரு கேள்வியை முன்வைத்தார். எந்த விருது யாருக்கு பொருந்தும் என தனிப்பட்ட முறையில் நினைக்கிறீர்கள் என ஆண்கள் அணியிடம் அக்கேள்வியைக் கேட்டார்.

இதற்கு ஆண்கள் அணியில் இருந்தவர்கள், தாங்கள் பெற்ற விருது இவருக்குப் பொருந்தும் என அர்ணவுக்கே வழங்கினர்.

ஆண்கள் அணியில் கைவிடப்பட்ட அர்ணவ்

பார்வையாளர்களைப் பார்க்கும் பார்வையாளர் என்ற விருதைப் பெற்ற ஜெஃப்ரி, அதனை அர்ணவுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

குரூப்புல டூப்பு விருது வாங்கிய சத்யா அதனை அர்ணவுக்கே பொருந்தும் என்றார்.

டம்மி பாவா விருது வாங்கிய முத்துக்குமரன் அதனை அர்ணவுக்கே வழங்கினார்.

டிராமா குயின் விருது பெற்ற தீபக், ஒரே நபருக்கு இத்தனை விருதுகளை எப்படித் தருவது எனக் கூறிவிட்டு, அதனையும் அர்ணவுக்கே கொடுத்தார்.

சுமைதாங்கியாக இருக்கும் அர்ணவ், இது குறித்து உங்கள் கருத்தென்ன என விஜய் சேதுபதி கேட்க, இவ்விருதுகளை வாங்கியதில் மிகவும் பெருமையாக இருப்பதாகக் குறிப்பிட்டார் அர்ணவ். இதில் பெருமையாகப் பார்க்க என்ன இருக்கு என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.

அணியினர் அனைவரும் தன் மீது எதிராக திரும்ப, விஜய் சேதுபதியும் கேள்வியால் துளைத்ததால்,

செய்வதறியாது நின்றார் அர்ணவ். இதுவே இன்றைய முன்னோட்ட விடியோவின் சாராம்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.