சிம்பு - 49 அறிவிப்பு!

சிம்பு - 49 அறிவிப்பு!

சிம்பு - 49 படத்தின் அறிவிப்பு வெளியானது...
Published on

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன் சிம்பு தன் எக்ஸ் தள பக்கத்தில் , ”தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 - 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்திருந்தார். படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ’ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 49-வது படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com