இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மறுவெளியீடாகும் கேப்டன் பிரபாகரன்!

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடாகிறது.

Published On :15 ஏப்ரல் 2025, 1:53 pm IST

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மறுவெளியீடாகிறது.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த்தின் 100-வது படமான இது அன்றைய நிலவரப்படி அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளிலேயே 300 நாள்களுக்கு மேல் ஓடிய பிரம்மாண்ட திரைப்படமாகும்.

இதில், வில்லனாக மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழில் உருவான அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரனுக்கு தனித்துவமான இடம் உண்டு என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story image

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இதனை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளனர்.

அதற்கான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.