

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராகத் தகுதியான நபர் குறித்து நடிகர் ப்ரஜினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதில், தனது மனைவி சான்ட்ராவைக் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயரைத் தவிர்த்துவிட்டு மற்றொரு பெயரை ப்ரஜின் கூறினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் அமித் பார்கவ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக 9 வது வாரத்தின் இறுதியில் நடிகர் ப்ரஜின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் பிக் பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன் உடனான நேர்காணலில், தனது அனுபவங்கள் குறித்து ப்ரஜின் பகிர்ந்துகொண்டார்.
இதில், சான்ட்ரா உடனான ஆட்டத்தை துண்டித்ததன் மூலம் தனது ஆட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்துப் பேசினார். தான் வெளியேறியதும் சான்ட்ரா உடைந்துவிட்டதாகவும், அவரை ஆறுதல்படுத்திவிட்டு வெளியேற வேண்டும் என்பதால், பிக் பாஸ் வீட்டில் அழவில்லை எனவும் குறிப்பிட்டார்.
விஜய் சேதுபதி மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும், அவருடனான நட்பு ஆட்டத்தை பாதிக்கக்கூடாது என்பதால், மரியாதையுடன் சார் என்றே அழைத்ததாகவும் கூறினார்.
ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நல்ல பெயருடன் வெளியே வந்துள்ளாய் என விஜய் சேதுபதி கூறிய பிறகே இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவித்தார்.
இந்த சீசனில் வெற்றியாளர் யாராக இருப்பார் என முத்துக்குமரன் கேட்டதற்கு பதில் அளித்த ப்ரஜின், சான்ட்ராவைத் தவிர்த்து சுபிக்ஷாவைக் குறிப்பிட்டது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சான்ட்ராவை விட சுபிக்ஷா தனது ஆட்டத்தில் உண்மையாக இருப்பதால் அவர் வெற்றியாளராக வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறினார்.
ப்ரஜினின் இந்த பதில் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. மனைவி சான்ட்ரா பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தாலும், உண்மையான உழைப்பு செலுத்துபவரை ப்ரஜின் குறிப்பிட்டுள்ளதாக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க | வழக்குரைஞர் அமித், சட்ட மாணவி திவ்யா... பிக் பாஸ் வீட்டின் நீதிபதிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.