மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணி... ஸ்ருதி ஹாசன் குரலில் முதல் பாடல்!

மிஷ்கின் இயக்கியுள்ள ட்ரெயின் படத்தின் முதல் பாடல் குறித்து...
Vijay Sethupathi, Shruti Haasan.
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன்.படங்கள்: யூடியூப் / சரீகம தமிழ்.
Updated on
1 min read

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

கபிலனின் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். 

இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொடு தனது டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். இந்நிலையில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ட்ரெயின் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார். இதில் நடிகை டிம்பிள் ஹயாதி, ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Vijay Sethupathi, Shruti Haasan.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 9-ஆவது திரைப்படம்..! அறிவிப்பு விடியோ!
Summary

The first song from the film 'Train', starring actor Vijay Sethupathi and directed by Mysskin, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com