ரஜினியிடம் கதை சொன்ன நித்திலன்!

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நித்திலன் கூட்டணி குறித்து...
நடிகர் ரஜினியுடன் நித்திலன் சாமிநாதன்.
நடிகர் ரஜினியுடன் நித்திலன் சாமிநாதன்.
Published on
Updated on
1 min read

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் நடிகர் ரஜினிக்கு கதை சொன்னதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதி - நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது சீனா வரை இப்படம் வசூலைக் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உலகளவில் கவனம்பெற்றதுடன் ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாளர் அலெக்ஸாண்டர் டெனலாரிஸ், நித்திலனை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அடுத்தாக, நித்திலன் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது.

ஆனால், இப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நித்திலன் மீண்டும் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நித்திலன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து கதை ஒன்றைக் கூறியுள்ளாராம். இது ரஜினிக்கு பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தக் கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்குமென ரசிகர்கள் கருதுகின்றனர்.

actor rajinikanth hear and enjoyed director nithilan swaminathan next movie story

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com