மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பைசன் காளமாடன் - புதிய அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்கும் பைசன் படத்தின் அப்டேட்.

News image

பைசன் காளமாடன் பட போஸ்டர்

Updated On :5 மார்ச் 2025, 1:47 pm

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் துருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து, தனது தந்தை விக்ரம் உடன் இணைந்து இவர் நடித்த மகான் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, துருவ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் காளமாடன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், அமீர், ரஜிஷா விஜயன், லால், பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாழை படத்தின் வெற்றிக்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைசன் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) மார்ச் 7 அன்று வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பைசன் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.