பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாக கல்பனாவின் மகள் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் போலீஸாா் நுழைந்தபோது சுயநினைவற்ற நிலையில் அவா் இருப்பதைக் கண்டனர். தொடர்ந்து, போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனர்.
தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவா்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பைசன் காளமாடன் - புதிய அப்டேட்!
இந்த நிலையில், பாடகி கல்பனாவின் மகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எனது தாய் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைந்த மாத்திரையை சாப்பிட்ட நிலையில், அம்மாத்திரையின் வீரியம் காரணமாக இதுபோன்று நடந்துள்ளது.
அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவர் தற்போது நலமுடன் உள்ளார், சில நாள்களில் வீடு திரும்புவார்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





