நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அனாவசியமான கேள்வியைக் கேட்கலாமா? கோபமான இளையராஜா!

சிம்பொனி இசைக்காக லண்டன் கிளம்பினார் இளையராஜா...

News image
Updated On :6 மார்ச் 2025, 1:42 pm IST

இசைமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசைக் கச்சேரிக்காக லண்டன் கிளம்பினார்.

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது, இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையைச் செய்யவுள்ள இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக இன்று இளையராஜா லண்டன் கிளம்பினார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்தவர் சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், சில கேள்விகள் கேட்கப்பட்டன.

முக்கியமாக, ’ஒரு தமிழராக எப்படி உணர்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘மனுஷனாக எப்படி உணர்கிறேன் என கேளுங்கள். இப்படிப்பட்ட இடைஞ்சலான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இளையராஜா.

செய்தியாளர்கள் சந்திப்பில் இளையராஜா.

தொடர்ந்து, “இசையமைப்பாளர் தேவா தன் இசையை இன்றைய இளைஞர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நான் எதற்காக வந்திருக்கிறேன்? இந்த மாதிரி அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்கலாமா?’ எனப் பதிலளித்தார்.

மேலும், ”உங்கள் அனைவரின் சார்பாகத்தான் லண்டன் செல்கிறேன். இது நாட்டின் பெருமை. இன்கிரிடிஃபிள் (incredible) இந்தியா மாதிரி இன்கிரிடிஃபிள் இளையராஜா நான்!” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.