நடிகர் மம்மூட்டி வில்லனாக நடிக்கும் ‘களம்காவல்’ எனும் புதிய திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த நடிகரான மம்மூட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’.
நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். மேலும், களம்காவல் படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், ‘களம்காவல்’ திரைப்படம் வரும் நவ.27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றது எனவும், புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு இன்று (நவ. 20) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: பைசன் முதல் டீசல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.