நடிகர் டொவினோ தாமஸ் குப்பி திரைப்பட இயக்குநர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.
மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர்களின் அடுத்தகட்ட பிரம்மாண்ட திரைப்படம் குறித்த அறிவிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
திரையுலக வட்டாரங்களின்படி, இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படம், இருவரின் திரைப் பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் (High-budget) உருவாகும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இவர்களுடன் ‘குப்பி’ படத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இப்புதிய படத்தில் இணையவுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘குப்பி’, நடிகர் டொவினோ தாமஸின் திரைப் பாதையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் 'தேஜஸ் வர்க்கி' எனும் பொறியாளராக அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல், இயக்குநர் ஜான்பால் ஜார்ஜுக்கு ஒரு கனவு அறிமுகப் படமாக அமைந்து, மலையாள திரையுலகில் மிகச் சிறந்த இயக்குநராக அவரை அடையாளம் காட்டியது.

‘குப்பி’ படத்திற்கு பிறகு ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘தீவண்டி’, ‘கோதா’, ‘மாயநதி’, ‘மின்னல் முரளி’, ‘2018’ மற்றும் ‘அஜயண்டே ரண்டாம் மோஷனம்’ (ARM) எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து, இன்று இந்திய அளவில் அறியப்படும் முன்னணி நாயகனாக டொவினோ தாமஸ் உருவெடுத்துள்ளார்.
அதேபோல, இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் தனது அடுத்த படைப்பான ‘அம்பிலி’ மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘ரோமான்சாம்’ திரைப்படத்தை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராகவும் மலையாள சினிமாவில் தடம் பதித்தார்.
‘குப்பி’ திரைப்படத்தின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு, அதே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actor Tovino Thomas is once again acting under the direction of the Guppy film's director.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே பாரத் ரயிலில் அளித்த வடையில் பசை குப்பி: பயணி புகாா்

ஓடிடியில் வெளியான டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி!

எதிர்காலம் நசுக்கப்படுகிறது... வைரலாகும் டொவினோ தாமஸின் பதிவு!

டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி ஓடிடி தேதி!
விடியோக்கள்

அடுத்த ஜென்மம் ஏன்? இந்த ஜென்மத்திலேயே பண்ணலாமே! - விஜய் குறித்து பிரேமலதா




