அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

கில் ரீமேக் திரைப்படத்திலிருந்து விலகல்! நடிகர் துருவ் மீது புகார்?

கில் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் குறித்து...

News image

நடிகர் துருவ்

Updated On :9 ஜூலை 2026, 1:00 pm IST

நடிகர் துருவ் கில் திரைப்படத்தின் ரீமேக்கிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில் (kill). 120 நிமிடங்களுக்கும் குறைவான நேரங்களே கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்றதால் இந்தியாவில் உருவான சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்று என பாராட்டுகளைப் பெற்றது.

இதில் நாயகனாக லஷ்யா லால்வானி முக்கிய கதாபாத்திரத்தில் ராகவ் ஜுயல், தன்யா மணிக்த்லா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையைப் பெற்ற ரமேஷ் வர்மா தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகர் துருவ் விக்ரமை ரூ. 5 கோடி சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் இப்படத்திலிருந்து விலகிய துருவ், பைசன் வெற்றிக்குப் பின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப்படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதனால், கில் திரைப்படத்தின் தமிழ்ப் படக்குழு துருவ்வை நம்பி நிறைய செலவு செய்ததால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Dhruv has reportedly opted out of the remake of the film kill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.