இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல்! புரோமோ வெளியீடு!

கராத்தே பாபு திரைப்பட முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது...

News image

கராத்தே பாபு படத்தில் ரவி மோகன் - youtube

Updated On :11 ஜூன் 2026, 7:51 pm IST

நடிகர் ரவி மோகனின் “கராத்தே பாபு” திரைப்பட முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “கராத்தே பாபு”. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், நடிகர் ரவி மோகனின் அரசியல்வாதி கதாபாத்திரம் பெரும் பேசுபொருளானது.

இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ் ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் “ராசாதி ராசா” எனும் முதல் பாடலின் புரோமோ விடியோவை படக்குழுவினர் இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ளனர்.

பாடகி மீனாட்சி இளையராஜா வரிகள் எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The promo video for the first song from actor Ravi Mohan's film "Karate Babu" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.