
இனிமையான செப்டம்பர்... நடிகை துஷாரா விஜயனின் நினைவுகள்!
நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்த செப்டம்பர் மாத நினைவுகள் குறித்து...

நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்த செப்டம்பர் மாத நினைவுகள். - படங்கள்: இன்ஸ்டா / துஷாரா விஜயன்.
நடிகை துஷாரா விஜயன் செப்டம்பர் மாத நினைவுகள் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் "இனிமையான செப்டம்பர்” எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய புகழினைப் பெற்றார்.
இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன் படங்களில் நடித்திருந்தார். விக்ரமுடன் வீர தீர சூரன், மலையாளத்தில் காட்டாளன் படத்திலும் அறிமுகமாகி சிறப்பாக நடித்திருந்தார்.
நடிகர் மாதவன் உடன் ஜிடி நாயுடு படத்திலும் நடித்துள்ள அவர் ராஜு ஜெயமோகன் உடன் ஆல்மோஸ்ட் நல்லவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
உடல்நலத்திலும் உடற்பயிற்சியில் அக்கறைக் கொண்ட துஷாரா விஜயன் சமீப காலமாக பாக்ஸிங் பயிற்சியிலும் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டிலும் ஈடுபட்டு வந்தார். 4 மாதங்களில் 13 கிலோ உடல் எடையைக் குறைத்திருந்தார்.
விஷாலுடன் நடித்த மகுடம் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. தற்போது, பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் தான் செய்த உடற்பயிற்சி, சுற்றுலா, உணவு மற்றும் நொறுக்குத்தீனி தின்பது குறித்த புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு, “இனிமையான செப்டம்பர்” எனக் கூறியுள்ளார்.
Summary
A sweet September... Actress Dushara Vijayan's memories on instagram!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






