சிவாஜி பேரன் தர்ஷனின் லெனின் பாண்டியன்: ஓடிடி வெளியானது!
லெனின் பாண்டியன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறித்து..

லெனின் பாண்டியன் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
லெனின் பாண்டியன் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று (அக். 16) வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக நடித்து வெளியான புதிய திரைப்படம் லெனின் பாண்டியன். இந்தப் படம் கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கங்கை அமரன், ரோஜா, ஸ்ரீரித்தா ராவ், ஜாஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ்வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
அரசியல் செல்வாக்குடன் அதிகார வெறி கொண்டு இருக்கும் வில்லன்களுக்கு எதிராக சாமானிய முதியவர் நடத்தும் சட்டப் போராட்டம் என்ன ஆனது என்பதே லெனின் பாண்டியன் திரைப்படத்தின் கதை.
இந்த நிலையில், லெனின் பாண்டியன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று(அக். 16) வெளியாகியுள்ளது.
Summary
Lenin Pandian's film has been released on an OTT platform.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

