
மெட்டி ஒலி போஸ்... 25 ஆண்டுகளாக என் மீதான பார்வை மாறவில்லை: நடிகர் போஸ் வெங்கட் வருத்தம்!
மெட்டி ஒலியில் போஸ் என்ற பாத்திரத்தில் நடித்திருந்த போஸ் வெங்கட், இயக்குநர் திருச்செல்வத்துடன் பேசியது குறித்து...

மெட்டி ஒலி போஸ் / நடிகர் போஸ் வெங்கட் - இன்ஸ்டாகிராம்
மெட்டி ஒலி தொடர் ஒளிபரப்பாகி 25 ஆண்டுகள் ஆன நிலையிலும், தன்னை போஸ் என்ற பாத்திரமாகவே பார்ப்பதாக நடிகர் போஸ் வெங்கட் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தன் மீதான பிம்பம் மாற வேண்டும் என இடையே பல்வேறு முயற்சிகள் எடுத்ததாகவும், ஆனால், அவை பெரிதாக பலன் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் 2002 ஏப்ரல் முதல் 2005 ஜூன் வரை மெட்டி ஒலி தொடர் ஒளிபரப்பானது. சன் தொலைக்காட்சியில் அதிக நாள்கள் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் என்ற பெருமையை மெட்டி ஒலி அப்போது படைத்திருந்தது.
இயக்குநர் திருமுருகன் இயக்கிய இத்தொடரில் நடித்த போஸ் வெங்கட், சஞ்சீவ் வெங்கட், காயத்ரி, ராஜ்காந்த் உள்ளிட்ட பலரும் சின்ன திரையில் பிரபல நடிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில், எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வத்தின் கதைக்கு அப்பால் நிகழ்ச்சியில் நடிகர் போஸ் வெங்கட் பங்கேற்று கலந்துரையாடினார்.
அதில், மெட்டி ஒலி தொடரில் தான் நடித்த கதாபாத்திரம் குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார். அதாவது, மெட்டி ஒலி ஒளிபரப்பாகி 25 ஆண்டுகள் ஆன பிறகும், தன்னை மெட்டி ஒலி போஸ் ஆகவே பலர் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் மட்டுமல்ல, சில இயக்குநர்களும் அந்த கோணத்திலேயே பார்ப்பதால், அதனை மாற்ற கடுமையாகப் போராடியதாகவும், அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை எனவும் கூறினார்.
கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திருமுருகனிடம் உதவி இயக்குநராக இருந்த நிலையில், கோலங்கள் தொடரை இயக்கும்பொது, போஸ் வெங்கட்டுக்கு சிவதாஸ் பாத்திரத்தை எழுதியதாகவும், அதில் நடித்திருந்தால் அவர் மீதான பார்வை மாறியிருக்கும் எனவும் திருச்செல்வம் நினைவுகூர்ந்தார்.
நடிகர் சூர்யாவுடன் கங்குவா படத்தில் போஸ் வெங்கட் நடித்திருந்தார். இப்படத்தின் பாத்திரம் தன் மீதான பார்வையை மாற்றும் என நம்பியிருந்த நிலையில், அப்படம் தோல்வி அடைந்ததால் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் போஸ் வெங்கட் கூறினார். பின்னர் தான் ஒரு இயக்குநராக மாறியதையும் பற்றி பேசினார்.
Summary
Metti Oli Bose... The way people view me hasn't changed in 25 years: Actor Bose Venkat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






