கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தேசிய கராத்தே போட்டி: ஸ்ரீவிலி. மாணவர்கள் வெற்றி

ஜப்பான் சிட்சோரியூ கராத்தே டூ-காய், இந்திய சென்புகாய் சார்பில் நாகர்கோவில், ஜெபமலை மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

News image
Updated On :6 டிசம்பர் 2012, 5:20 am

கோ.ஜெயக்குமார்

ஜப்பான் சிட்சோரியூ கராத்தே டூ-காய், இந்திய சென்புகாய் சார்பில் நாகர்கோவில், ஜெபமலை மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

போட்டிகள் டிசம்பர் 1, 2-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் ஜப்பான் சோட்டோக்கான் டென்சின்கான் கராத்தே தமிழ்நாடு சார்பில் அதன் தலைமை பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். 20-25 கிலோ எடை பிரிவில் மகாத்மா வித்யாலயாவின் எஸ்.கார்த்திகாயினி முதல் இடமும், 9 வயது கட்டா பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றார்.

ஆராய்ச்சிபட்டி காமராஜர் பள்ளி மாணவர் சுந்தர் (எ) அரசு 35-40 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். தியாகராசா மேல்நிலைப் பள்ளி மாணவர் பாலகணபதி 35-40 கிலோ எடை பிரிவில் இரண்டாவது இடத்தையும், சோட்டோகான் பள்ளி மாணவி விஜய சூரிய சுபசங்கரி 19 வயது பிரிவில் பிளாக் பெல்ட் கட்டா பிரிவில் முதல் இடத்தையும் பெற்றார்.

ராஜபாளையம், ராஜூக்கள் கல்லூரி மாணவர் அரிஸ்டோபால் 45-50 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி மணிமேகலை 35-40 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவ மாணவியரின் சாதனையை பாராட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் பரிசு வழங்கி கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.